வரலாறு காணாத வெப்பம் – 1300 பேர் பலி
Share
ஐரோப்பாவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக இதுவரை ஆயிரத்து 300க்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
வரலாறு காணாத வெப்பம் நிலவுவதால் ஐரோப்பிய நாடுகளில் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். சில பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 40 பாகை செல்சியசிற்கும் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வெப்பநிலை பாரியளவு அதிகரித்துள்ளதால், கடும் கோடைக் காலத்தை ஐரோப்பிய மக்கள் அனுபவித்து வருகின்றனர். இதனால் நோய்கள்,மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன், செக் குடியரசு மற்றும் போலாந்து ஆகிய நாடுகளில் 40 பாகை செல்சியஸ் கடந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. பிரான்சில் கடும் வெப்பம் நிலவுகிறது. அந்நாட்டில் வெப்பத்தின் கொடூரத்தால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதேவேளை பூமியில் வேகமாக வெப்பமயமாகும் கண்டமாக ஐரோப்பிய கண்டம் மாறி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எதனம் தெரிவித்துள்ளார். உயர் வெப்பநிலைக்கு மத்தியில் கண்டத்தின் உட்கட்டமைப்புகளும் கடும் பாதிப்பை எதிர்கொள்ளும் அபாயம் நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.