Type to search

Headlines News World News

வெனிசுலா நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,700-ஐ தாண்டியது!

Share

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 1,700 ஐத் தாண்டியுள்ளது. 

இதற்கமைய, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,719 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

வடக்கு வெனிசுலாவின் ‘லா குவைரா’ (La Guaira) மாகாணத்தைத் தாக்கிய இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களினால் இதுவரை 5,034 பேர் காயமடைந்துள்ளனர். 

அதேபோன்று, மேலும் பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சமீபத்தில் வெனிசுலாவைத் தாக்கிய ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான முக்கிய நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இதுவரை 600 க்கும் மேற்பட்ட அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link