தரிசனம்
Share
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 9
உலகின் கண் இருக்கக் கூடிய சமயங்களுக்குத் தலைமைப் பீடங்கள் இருப்பதை நாம் அறிவோம். உலகளவில் கத்தோலிக்கத்தின் தலைமைப்பீடம் வத்திக்கானில் உள்ளது.
அதேபோன்று நாடுகள் தோறும் பாப்பரசர்களின் பிரதிநிதிகள் தத்தம் தலைமைப் பீடத்தின் கட்டளைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
இலங்கையைப் பொறுத்த வரை மேற்றாணியார் என்ற தலைமையின் கீழ் மாவட் டங்கள் தோறும் ஆயர்கள் நியமிக்கப்பட்டு அவர்களினூடு கத்தோலிக்க மதம் நிர்வகிக்கப்படுகிறது.
இவ்விதம் ஆயர் இல்லங்கள் கத்தோலிக்கக் குடும்பங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொருட்டு திருச்சபைக் கட் டுப்பாடுகளை அமுலாக்கி வருகின்றனர்.
அதற்கு இலங்கைச் சட்டமும் அனுமதித்துள்ளது.
உதாரணத்திற்கு கத்தோலிக்கக் குடும்பத்தில் இடம் பெறக்கூடிய பதிவுத் திரு மணமானது அவரவர் பங்குக்குரிய தேவாலயத்தில் அதன் பங்குத் தந்தையால் பதிவுத் திருமணம் நிறை வேற்றி வைக்கப்படும்.
இங்கு விவாகப் பதிவாளர் தேவையில்லை. ஆக விவாகப் பதிவாளர் என்பது இந் துக்களுக்கேயாம். இந்துக்களின் பதிவுத் திருமணத்தைச் செய்து வைக்கின்ற அதிகாரம் சிவாச்சாரியர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதை இங்கு குறித்து ரைப்பது பொருத்தமே.
ஆக, கத்தோலிக்கத் திருச்சபையின் சட்டங்களை பெளத்த சிங்கள நாடு எனக் கூறுகின்ற இலங்கையிலும் ஓரங்கட்ட முடியவில்லை எனும் போது, உலகளவில் கத்தோலிக்கத்தின் தலைமை எத்துணை பலத்துடன் உள்ளதென்பதை எவரும் அறிய முடியும்.
இதேபோன்று இஸ்லாமிய மதம் என்பது ஆட்சிப் பீடங்களுடன் இணைக்க ப்பட்டுள்ளன.
ஆம், மன்னர்களாயினும் சரி, இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களாயினும் சரி, அங்கு இஸ்லாமிய மார்க்கமே முதன்மைக்குரியதாம்.
ஐந்து நேரத் தொழுகை- மார்க்கத்தைப் பின்பற்றாதவர்களுக்கான தண்டனை-பெண்கள் தொடர்பில் அமுலாக்கப்படும் இறுக்கமான கட்டுப்பாடுகள் என அனைத்தும் இஸ்லாமிய மார்க்கத்தின் பாற்பட்டதாகும்.
உலகில் இஸ்லாமிய மதங்கள் எங்கெல்லாம் பரவியுள்ளதோ அங்கெல்லாம் இஸ்லா மிய சட்டங்களுக்கு ஏற்றதான அரச நடைமுறைகளும் அமைகின்றன.
உதாரணத்திற்கு இலங்கையில் வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் 12 மணிக்குப் பின்பாக பொதுப்பரீட்சைகள் நட த்தப்படுவதில்லை. இதற்குக் காரணம் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கான தொழுகை இஸ்லாமியர்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரமே இலங்கையில் வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் 12 மணிக்குப் பின்பாக பொதுப் பரீட்சைகள் நடத்தப்படுவதில்லை.
இங்கு தான் இலங்கை ஒரு பெளத்த சிங்கள நாடு என பேசிக் கொண்டாலும் வருடத்தில் 52 வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் 12 மணிக்குப் பின்பாக பொதுப்பரீட்சைகள் மற்றும் அரச பொதுக் கூட்டங்கள் என்பவற்றை நடத்த முடியாமல் உள்ளது.
இதற்கு மேலாக, இஸ்லாமியர்களின் நோன்புக் காலங்களில் முஸ்லிம் பாடசாலைக ளுக்கு விடுமுறை வழங்கப்படுகின்றன.
தவணை விடுமுறையாக இது கருதப்பட்டாலும் இலங்கை என்ற இறையாண்மை யுள்ள ஒரு நாட்டில் பாட சாலைக் கலண்டரில் சிங்கள- தமிழ் பாடசாலை நாட்காட்டி என்றும் முஸ்லிம் பாடசாலை நாட்காட்டி என்றும் பிரித்துத் தயாரிக்க வேண்டிய தேவையை இந்த நாட்டின் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் இஸ்லாத்தின் பெயரால் நிறைவேற்றியுள்ளனர் எனும் போது, இஸ்லாமிய மதத்தின்-மார்க்கத்தின் வலிமை எத்துணை என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
இற்கும் மேலாக, ஓர் இஸ்லாமியர் இயற்கை எய்து வாராயின் அவரின் ஜனாசா அடக்கம் 24 மணி நேரத்திற்குள் செய்தாக வேண்டும் என இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது.
மார்க்கத்தின் விதிமுறையில் இருந்து அவர்கள் ஒருபோதும் விலக மாட்டார்கள்.
ஆம், இந்த நாட்டின் அமைச்சராக இருந்த எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்தார். அவரின் உடலை மீட்பதில் காலதாமதமாகியது.
இராப்பொழுது வேளையில் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஒர் அமைச்சரின் உடல் மீட்கப்பட்டால், அவருக்கு பொதுமக்கள் மற்றும் மந்திரி பிரதானிகள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள், அஞ்சலி உரைகள், இறுதி ஊர்வலம் செல்லும் பாதைகள் என்பன தொடர்பிலேயே ஆராயப்படும்.
ஆனால் அஷ்ரப்பின் உடல் கண்டெடுக்கப்பட்டதும் பேழையில் வைக்கப்பட்ட அவரின் ஜனாசாவை வேகவேகமாக மைய வாடிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.
அமைச்சர் அஷ்ரப்பின் மரணம் ஏற்படுத்திய வேதனையை விட, அவரின் மறை வினால் ஏற்பட்ட இழப்பை விட, எங்கே இஸ்லாமியமார்க்கத்திற்கமைய அஷ்ரப்பின் உடலை 24 மணித்தியாலங்களுக்குள் அடக்கம் செய்ய முடியாது போய்விடுமோ என்ற ஏக்கமே அந்த இடத்தில் இருந்த இஸ்லாமிய சகோதரர்களிடம் குடிகொண்டிருந்தது.
ஆக, இஸ்லாமியர்கள் தங்கள் மார்க்கத்தை ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
உண்மை. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இஸ்லாமியர் ஒருவர் அனுமதிக்கப்பட்ட சொற்ப நேரத்தில் உயிரிழந்து விட்டால் மரண விசாரணை அதிகாரி வர வேண்டும், பொலிஸ் விசாரணை நடத்த வேண்டும், பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
மாறாக, உயிரிழந்த இஸ்லாமியரின் உடலை உடனடியாக ஒப்படைத்து விட வேண்டும் என்பதில் யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம் தீவிரமாக இருக்கும்.
இதேவேளை உயிரிழந்தவர் ஓர் இந்துவாக இருந்தால், பிரேத அறையில் இந்துவின் உடல் கருவாடாகக் கிடக்கும். அவரின் உறவுகள் மரங்களுக்குக் கீழ் குந்தியிருந்து கதையும் கண்ணீருமாய் காத்திருப்பர். இதுவே இந்துக்களின் நிலைமை என்பதை இவ் விடத்தில் கூறுவது யாருக்கேனும் சுரணையை ஏற்படுத்தாதா என்பதற்காகவே.
தொடரும்…


