Type to search

Headlines Local News News

முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

Share

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன் கிழமை முதல் 31 ஆம் திகதி வரை விசேட விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டும், பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான விடுமுறையினை அடிப்படையாகக் கொண்டும் இந்த விசேட தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த விடுமுறை தினங்களைக் கவனித்திற் கொள்ளுமாறும் விடுமுறை முடிவடைந்து மீண்டும் ஜூன் மாதம் முதலாம் திகதி (01.06.2026) வழமை போல் பாடசாலைகள் அனைத்தும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link