Type to search

Headlines News World News

பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது!

Share

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ரோயல் ஓர்டர் ஒஃப் போலார் ஸ்டார் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் நாட்டின் இளவரசியான விக்டோரியா இவ் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளார்.

பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். பின்னர் அங்கிருந்து நெதர்லாந்து சென்றார்.

இந்நிலையில் மூன்றாவது நாடாக ஸ்வீடனுக்கு அவர் நேற்று சென்றார்.

சர்வதேச அளவில் பிரதமர் மோடிக்கு கிடைத்த 31ஆவது கௌரவ விருது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் பயணத்தை முடித்துக்கொண்டு நோர்வே செல்லும் பிரதமர் மோடி, தொடர்ந்து அங்கிருந்து இத்தாலி செல்கிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link