Type to search

Headlines News World News

கொங்கோவில் மீண்டும் இபோலா வைரஸ் தாக்கம்

Share

மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் மீண்டும் இபோலா வைரஸ் தாக்கம் உச்சமடைந்துள்ளது. 17 ஆவது முறையாக எபோலா வைரஸ் பரவியுள்ள நிலையில், தொற்றினால் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

இபோலா வைரஸ் தாக்கம் கொங்கொவில் காலத்திற்கு காலம் தாக்கம் செலுத்தி வருகிறது. இறுதியாக, கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட எபோலா பரவலில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொங்கோவின் இடூரி மாகாணத்தில் எபோலா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 246 பேருக்குப் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

கொங்கோவில் முதல்முறையாக 1976 ஆம் ஆண்டு எபோலா வைரஸின் பரவல் கண்டறியப்பட்டது. கடந்த 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான எபோலா பரவலில் சுமார் 1,000 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link