Type to search

Headlines Local News News

முச்சக்கர வண்டி தடம்புரள்வு ; 4 வயதுச் சிறுவன் மரணம்!

Share

மாத்தறை, வெலிகமை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி வீதியில் தடம்புரண்டு இடம்பெற்ற விபத்தில் 4 வயதுச் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மேற்படி சிறுவன் நேற்று முன்தினம் இரவு தனது பெற்றோருடன் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போதே, அந்த முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

விபத்தில் பலத்த காயமடைந்த 4 வயதுச் சிறுவன் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் பெற்றோரும், முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link