Type to search

Headlines Local News News

பல மாவட்டங்களுக்கு 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை

Share

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அனுராதபுரம், திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யும். மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது மின்னல் தாக்கங்கள் மற்றும் தற்காலிக பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link