இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார் முன்னாள் ஆளுநர் விலீ கமகே!
Share
தென் மாகாண சபையின் முன்னாள் ஆளுநராகப் பதவி வகித்த விலீ கமகே, இன்று (11) இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
குறித்த ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணை ஒன்றிற்கு அமைவாக, வாக்குமூலம் வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமையவே அவர் அங்கு வருகை தந்துள்ளார்.
எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் விலீ கமகே ஆகியோரை வாக்குமூலம் பெறுவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அந்த ஆணைக்குழு கடந்த 05ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


