பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார் உதய கம்மன்பில!
Share
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (11) முற்பகல் பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.
உதய கம்மன்பில எழுதிய நூலில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற மற்றுமொரு தாக்குதல் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு விடுத்த அறிவித்தலுக்கு அமைய அவர் அங்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


