Type to search

Headlines Local News News

பஸ்ஸூக்கு முன்னால் சரிந்து விழுந்த மரம் ; மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

Share

கடும் மழை காரணமாக மட்டக்களப்பிலிருந்து பிபிலை ஊடாக ஹட்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்றிற்கு முன்னால், பசறை பகுதியில் பெரிய மரம் ஒன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று சனிக்கிழமை (09) இரவு 10.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

மரம் வீதியில் சரிந்து விழுந்த போதிலும், பஸ் சாரதியின் துரித செயற்பாட்டினால் பஸ் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டதுடன், பஸ்ஸிலிருந்த பயணிகள் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பஸ்ஸில் பயணித்த பயணிகள், மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்குள் வீதி சீர்செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பஸ் மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link