Type to search

Headlines Local News News

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த சந்திரிக்கா

Share

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள சி. ஜோசப் விஜய் என்கிற ‘தளபதி விஜய்’க்கு, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு நேற்று (06) அனுப்பி வைத்துள்ள வாழ்த்துக் கடிதத்தில், நடந்து முடிந்த தேர்தலில் அவர் ஒரு சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவை இதன்போது நினைவுகூர்ந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, புதிய ஆட்சியின் கீழ் அந்த உறவுகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தளபதி விஜய்யின் எதிர்காலப் பணிகளுக்குத் தேவையான பலமும் வெற்றியும் கிடைக்கப் பிரார்த்திப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link