51 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்!
Share
51 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் இன்று (19) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஆவார்.
இவர் இன்று (19) அதிகாலை 12.55 மணிக்கு தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இருந்து தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான TG-307 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 34,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை உள்ளடக்கிய 170 சிகரெட் கார்ட்டூன்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் நடத்திய விசாரணையை அடுத்து, குறித்த சிகரெட்டுகள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டதுடன், அந்த நபருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.


