கொரோனாவால் இயற்கையில் மாற்றம்
Share
கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து நாசா செயற்கைக்கோள் படத்தை வெளியிட்டது.
கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் அதனால் உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர் நோக்கியுள்ளனர்.
எனினும் இதனால் இயற்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி சுற்றுச்சூழல் மாசு கணிசமாகக் குறைந்து வருவதாக கூறப்படுகின்றது.
வாகனப் பயன்பாடுகளின் குறைவு மற்றும் தொழிற்சாலைகள் மூடல் ஆகியவற்றின் காரணமாக காற்று மாசுபாடு கணிசமாகக் குறைந்துள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில் நாசா வெளியிட்ட அண்மைய செயற்கைக் கோள் தரவுகளின்படி, வடகிழ க்கு அமெரிக்கா முழுவதும் காற்று மாசுபாடு கடந்த சில வாரங்களில் சுமார் 30 வீதம் குறைந்ததாக சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், உலகின் ஏனைய பகுதிகளையும் நாசா விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டினர். 2015 முதல் 2019 மார்ச் வரையிலான காலகட்டத்தில் காற்று மாசுபாட்டை இந்தப் படம் காட்டுவதாக கூறப்பட்டது.
எவ்வாறாயினும் இந்த செயற்கைக்கோள் படம் உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காற்று மாசுபாடு எவ்வாறு குறைக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது.


