Type to search

Sports

ஷேன் வோர்ன் மனதில் சச்சின்

Share

“தனது கால கட்டத்தில் விளையாடிய வீரர்களின் சச்சின், லாரா தான் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள்,’’ என, அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வோர்ன் கணித்துள் ளார்.

அவுஸ்திரேலிய முன்னாள் ‘சுழல்’ வீரர் ஷேன் வோர்ன் (வயது-50), இவர் ‘இன்ஸ்டா கிராம்’ சமூக வலைதளத்தில் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சியில் சிறந்த துடுப்பாட்ட வீரர்களாக இந்தியாவின் சச்சின், மே.தீவுகளின் லாராவை கணித்தார்.

இந்திய ஜாம்பவான் சச்சின், 200 டெஸ்ட் (15,921 ஓட்டங்கள்), 463 ஒருநாள் (18,426) போட்டிகளில் விளையாடினார். தவிர இவர், டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள், அதிக சதம் மற்றும் சர்வதேச அரங்கில் ‘சதத்தில்’ சதம் உட்பட நிறைய சாதனைகள் படைத்தார்.

மே.தீவு களின் ஜாம்பவான் பிரையன் லாரா 131 டெஸ்ட் (11,953 ரன்), 299 ஒருநாள் (10,405) போட்டிகளில் விளையாடினார்.

இதுகுறித்து வோர்ன் கூறுகையில், “என்னுடைய கால கட்டத்தில் விளையாடிய வீரர்களில் சிறந்த பேட்ஸ்மேன்களாக இந்தியாவின் சச்சின், மே.தீவுகளின் லாரா முன்னிலை வகித்தனர்.

இவர்கள் இருவரில், அனைத்து சூழ் நிலையிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர் சச்சின் மட்டும் தான். டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் 400 ஓட்டங்களை ‘சேஸ்’ செய்யும் தகுதி லாராவுக்கு மட்டுமே உள்ளது,’’ எனறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link