சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழி முறைகளைக் கடைப்பிடிக்காமல், அதிகளவு பயணிகளை ஏற்றிச் சென்ற அனைத்து பஸ் சாரதிகள், நடத்துநர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டு மாறு போக்குவரத்து அமைச்சு உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீரவால் அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்னவுக்கு, இது குறித்து பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ...
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஜூன் மாதம் 20ஆம் திகதி இடம் பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தலுக்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று நள்ளிரவு வெளியாகியது. பாராளுமன்ற தேர்தல் வரும் 25ஆம் திகதி என முன்னர் அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவிப்பு ...
தொடர்ந்தும் ஊரடங்கு சட்டத்தை நீடித்து மக்களை முடக்கி வைத்துக் கொண்டு நாட்டின் உற்பத்திகளை கையாள முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் நாட்டினை முடக்கி வைத்திருந்தால் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி காணும் என கூறும் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தொற்று நோயை மறைத்து ...
வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். 2020 மார்ச் 20ஆம் திகதி அமுலாகிய ஊரடங்குச் சட்டம் காரணமாக மறுநாள் 21ஆம் திகதியிலிருந்து வலம்புரி நாளிதழை அச்சிட முடியவில்லை. உலகம் முழுவதையும் உலுப்பி நிற்கின்ற கொரோனாத் தொற்று இலங்கையிலும் ஏற் பட்டதன் காரணமாக, கடந்த ஒரு மாத காலமாக ஊரடங்கு அமுலாக்கப்பட்டது. ...
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிப்பிலிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு, முழுமையாகக் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். ஆண்கள் இருவரும் பெண்கள் இருவருமே இவ்வாறு முழுமையாகச் சுகமடைந்த நிலையில் வெலிகந்தை வைத்தியசாலையிலிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அம்புலன்ஸில் ...
வடமாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் இன்று தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றும் வாய்ப்புள்ள அசாதாரண நிலை நிலவுவதன் காரணமாக பொதுமக்கள் பின்வரும் விடயங்களை கடைப்பிடிப்பது அவசியமாகும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார். 1.யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூக மட் டத்தில் கொரோனா தொற்று ...
யாழ்ப்பாணம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று திங்கட்கிழமை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நிலையில் நேற்று மட்டும் ஒரே நாளில் 15 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் இன்று (ஏப்ரல் 19) ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் ...
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதி இப்போது திட்டமிடப்பட வேண்டுமா அல்லது தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமா என்ற கடுமையான விவாதத்திற்கு மத்தியில், தேர்தல்கள் ஆணைக்குழு தனது இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் சுகாதார அதிகாரிகளின் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான சூழல் சரியானதா என்பதை தீர்மானிக்கவும் கொரோனா ...
கெளரவர்களின் நிட்டூரத்தால் பாண்டவர்கள் 13 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டி யதாயிற்று. 13 ஆண்டுகளில் ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசமாகும். அஞ்ஞாதவாசம் என்பது எவருக்கும் தெரியாமல் மறைந்திருக்கின்ற காலம். இக்காலத்தில் பாண்டவர்களை யாரேனும் கண்டுவிட்டால், மீண்டும் 12ஆண்டுகள் வன வாசத்தை அனுபவிக்க வேண்டும் என்பது நியதி. ஆக 12 ...
கொரோனா தொற்று அபாயம் இன்னும் முழுமையாக நீங்கி விடவில்லை. எனவே வைரஸ் பரவுவதற்கு மீண்டும் இடமளிக்காத வகையில் அனைத்து சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி பொறுப்புடனும் பொறுமையாகவும் செயற்படுமாறு அரசு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் தொழிலுக்காக சென்று வருவதை தவிர வேறு சந்தர்ப்பங்களில் வீடுகளில் இருந்து ...