33 ஆயிரத்தைத் தாண்டியது பலி! பேரழிவை ஏற்படுத்தும் கொரோனா
Share
கொடிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியது. இதுவரை 199 நாடுகளுக்குப் பரவியுள்ள இந்த வைரஸ் மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
சீனாவின் ஹ_பேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த டிசெம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற் போது உலகையே உலுக்கி வருகிறது.
இந்த வைரஸ் தொற்று நோய்க்கு தடுப்பு மருந் துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேவருகிறது.
இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உயிரி ழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியது. இதேவேளை உலகம் முழுவதும் 6 இலட்சத்து 50 ஆயிரத்து 929 பேரு க்கு வைரஸ் பரவியது. அவர்களில் 30 ஆயிரத் திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
வைரஸ் தாக்குதல் காரணமாக 4 இலட்சத்து 81 ஆயிரத்து 72 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர். அவர்களில் 25 ஆயிரத்து 226 பேரின் நிலைமை கவலைக்கிட மாகவுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கடந்த டிசெம்பர் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உலகம் முழு வதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக் கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.