Type to search

World News

வெளியே வராதீர்கள் அப்பா! மோடி வெளியிட்ட காணொலி

Share

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஒரு சிறுமி, தனது தந்தைக்கு விடுக்கும் செய்தியை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் காணொலி மூலம் வெளியிட்டார்.

இந்தக் காணொலி இணையத்தளத்தில் வேகமாகப் பரவிவருகிறது.
கொரோனா வைரஸ் பரவி விடாமல் தடுப்பதற்கு பல்வேறு வழியிலான பிரசாரங்களை மத்திய, மாநில அரசுகள், தொண்டு அமைப்புக்கள் மேற் கொண்டு வருகின்றன. பிரபலங் களும், தனிநபர்களும் சமூக ஊடகங்கள் வாயிலாக விழிப்பு ணர்வுப் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சிறுமி, தனது தந்தைக்கு விடுக் கும் செய்தி என்று தலைப்பிட்டு ஒரு காணொலி காட்சியை நேற்று வெளியிட்டார்.

40 விநாடிகள் ஓடக்கூடிய அந்தக் காணொலி காட்சி தொகுப்பில், ஒரு சிறுமி மும்பையிலுள்ள தனது தந்தைக்கு கடிதம் எழுதுவதாக காட்சி விரிகிறது.
அவள், கடிதத்தில் தந்தைக்கு என்ன செய்தி சொல்கிறாள் என்பது பின்னணியில் ஒலிக்கிறது.
அன்புள்ள அப்பா…
நீங்கள்என்னோடு இல் லையே! உங்களைப் பார்க்க முடியவில்லையே! என்று நான் வருத்தப் படவில்லை. அம்மாவும் வருத்தப்படவில்லை. நீங்கள் மும்பையை விட்டு புறப்பட்டு விட வேண் டாம். இங்கு வரவும் வேண்டாம்.தயவு செய்து, நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ! அங்கேயே இருங்கள் அப்பா… நீங்கள் அங்கிருந்து வெளியே வந்தால், கொரோனா வைரஸ் வென்று விடும். நாம் கொரோனா வைரஸை வீழ்த்துவோம்.
இது கொரோனா வைரஸ் பரவுதலின் தீவிரத்தில் இருந்து தனது தந்தையைக் காக்க வேண்டும் என்ற சின்னஞ்சிறு மகளின் ஏக்கத்தை, தவிப்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

இந்த டுவிட்டர் பதிவை பிரதமர் மோடி வெளியிட்டதைத் தொடர்ந்து இது வேகமாகப் பரவி வருகிறது.இது வெளியான 3 மணி நேரத்தில் மட்டுமே 2 இலட்சத்துக்கும் அதிகமான தடவை பார்க்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் பேர் ‘லைக்’ தெரிவித்தனர். 6 ஆயிரம் பேர் ‘ரீடுவிட்’ செய்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link