Type to search

Local News

பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு மகிந்த தேசப்பிரிய அறிவிப்பு

Share

ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை அறிவித்தார்.

ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் 14 நாட்கள் செல்லும் வரையில் தேர்தல் நடை பெறும் தினத்தை அறி விக்க முடியாது என்றும் தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
தேர்தல் ஒத்திவைக்கப்படுவது எவரது தேவையின் அடிப்படையிலும் அல்ல என் றும் முழுமையாக வைரஸின் காரண மாகவே தேர்தலை ஒத்திவைக்க வேண்டி ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான தீர்மானம் மற்றும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கம் என்பன தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி இடம்பெறும் என ஜனாதிபதியினால் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் எதிர்வரும் திங்கட்கிழமைக் குள் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் நிராகரிக்கப்பட்டவை, அங்கீகரிக்கப்பட் டவை, வேட்பாளர்களின் இலக்கம், வாக் களிப்பு நிலையங்கள் என்பன போன்ற விட யங்கள் அடங்கிய அறிவிப்பு வெளியிடப் படும்.
அத்துடன் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் குறிப்பிட்ட அறிவிப்புடன் வாக்களிப்பு இடம் பெறும் திகதியும் வர்த்தமானி மூலம் அறி விக்கவேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட திகதி யில் ஏதாவது ஒரு பிரதேசத்தில் வாக்களிப்பு நடத்த முடியாத விசேட காரணம் இருந்தால் அந்த பிரதேசத்துக்கான வாக்களிப்பு திகதி வர்த்தமானி அறிவிப்பு வெளிவந்த தினத்தில் இருந்து 14 நாட்களுக்கு அப்பால் ஏதாவது ஒரு தினத்துக்கு தள்ளிப்போடும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருக்கின்றது.
நாங்கள் வெளியிடும் வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதியினால் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருந்த தேர்தல் இடம் பெறும் திகதியை நாங்கள் அறிவிக்க வேண்டும். என்றாலும் தேர்தல் சட்டத்தின் 24{3 சரத்தின் பிரகாரம், அந்த திகதியை நீடிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு இருக்கின்றது.
என்றாலும் குறித்த வர்த்தமானி அறி விப்பு வெளியிடுவதற்கு இன்னும் ஒருசில தினங்கள் செல்லும் என்பதால் தற்போதைக்கு வாக்களிப்பு இடம்பெறும் திகதியை அறி விக்க முடியாது. இருந்தபோதும் நாடு தற் போது எதிர்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால் பாராளுமன்ற தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்த முடியாது என ஆணைக்குழு தீர்மானித்திருக்கின்றது.
அத்துடன் இலங்கையில் கொரோனா வைரஸ் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் வந் திருப்பதாக உலக சுகாதார அமைப்பு நாளைய தினம் அறிவித்தாலும் எம்மால் ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது.
ஏனெனில் தேர்தல் தொடர்பான எமது வேலைத்திட்டங்கள் கடந்த ஒரு வாரமாக சரியான முறையில் மேற்கொள்ள முடியா மல் இருந்துள்ளன. அதனால் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட நிலைமைகளால் குறிப் பிட்ட திகதி வாக்களிப்பை நடத்த முடியாது. என்றாலும் கொரோனா வைரஸை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இருக்கும் சுகாதார பிரிவினருடன் கலந் துரையாடி தேர்தலை எந்தளவு காலத்துக்கு பிற்போடுவது என்ற தீர்மானத்தை எதிர் வரும் 26 ஆம் திகதி தீர்மானிக்கப்படும்.
அதன் பிரகாரம் நிச்சயமாக ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படமாட்டாது என் பதை உறுதியாக தெரிவிக்க முடியும் என்பது டன் ஏப்ரல் 26ஆம் திகதியில் இருந்து 14 நாட்களுக்கு அப்பால் தேர்தலை தள்ளிப் போடவும் தீர்மானித்திருக்கின்றது.
அது எந்த திகதி என்பதை எங்களால் தீர்மானிக்க முடியாது. கோவிட்19 எப்போது கட்டுப்பாட்டுக்கு வந்து தேர்தலை சுமுகமான முறையில் நடத்தலாம் என்ற சூழல் ஏற்படு கின்றதோ அதன் பிறகுதான் தேர்தல் தொடர்பான திகதி அறிவிக்கப்படும். அதனை கோவிட் 19 கட்டுப்படுத்தும் செய லணியே தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறினார்.
பாராளுமன்ற தேர்தலை குறிப்பிட்ட திகதியில் நடத்தமுடியாமல் இருப்பது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link