Type to search

Local News

வெளிநாட்டவர்களின் வருகை; அதீத கவனம் செலுத்துங்கள்

Share

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளது.நோய்த் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில்; இன்று அரச, தனியார் நிறுவனங்களுக்கும் விசேட விடு முறை வழங்கப்பட்டுள்ளது.தவிர, கொரோனாத் தொற்று அதிகரிக்கு மாயின் அரச, தனியார் நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை வழங்கப்படுகின்ற நிலைமைகளும் ஏற்படலாம்

.இவை ஒருபுறமிருக்க, இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்று உள்ளவர்கள் தென் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் நாங்கள் அதுபற்றி கருசனையற்றவர்களாக  இருந்து விடக்கூடாது.வீட்டு வாசலுக்கு கொரோனா வந்துவிட்டது என்ற எச்சரிக்கையை உணர்ந்து அதற்கேற் றாற்போல் நாம் செயற்படுவது கட்டாயமான தாகும்.அதேநேரம் வடபகுதியில் வெளிநாட்டவர் களின் நடமாட்டம் தொடர்ச்சியாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.இந்நிலையில் எமக்கு கொரோனா அச்சம் இல்லை என்ற நினைப்பில் நாம் இருப்பது மிகவும் ஆபத்தானது.ஆகவே கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எம்மைப் பாதுகாக்கின்ற ஏற்பாடு களை ஒழுங்கு செய்வது இங்கு முக்கியமாகி றது.இதற்கு மேலாக, வடபகுதிக்கு வருகின்ற வெளிநாட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதா என்ற விடயத்திலும் வடபகுதியில் உள்ள சுகா தார அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும்.

பொதுவில் வடபகுதிக்கு வருகின்ற வெளி நாட்டவர்கள் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வருகின்ற வெளிநாட்டவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள விடுதிகளில் தங்கி இருப்பதுடன் தமது உணவுத் தேவைக்காக யாழ்.நகரில் உள்ள உணவகங்களுக்கு வந்து போகின்றனர்.தவிர, யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்க்கும் பொருட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க இடங் களுக்கும் தீவகம் போன்ற பகுதிகளுக்கும் இவர்கள் செல்வதைக் காணமுடிகிறது.எனவே வடபகுதிக்குள் நுழைகின்ற வெளி நாட்டவர்கள் கொரோனாத் தொற்று இல்லாத வர்கள் என்ற விடயமும் அவர்கள் எங்கெங்கு தங்கி இருக்கின்றனர் என்ற தகவல்களும் பெறப்பட்டிருப்பது கொரோனாத் தொற்றைத் தடுப்பதற்குத் தேவையாக இருக்கும் என்பதால், இது விடயங்களிலும் சம்பந்தப்பட்டவர்கள் அதீத கவனம் செலுத்த வேண்டும். 

1 Comment

  1. admin March 19, 2020

    gfdhtfrftfd

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link