இராணுவத்தினர், பொலிஸாருக்கு முகக்கவசங்கள்
Share

மன்னாரில் ஊரடங்கு காலப்பகுதியில் வீதிகள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வரும் பாதுகாப்புத் தரப்பினர், பொலிஸாருக்குத் தேவையான முகக் கவசங்கள் மற்றும் குளிர்பனங்கள் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக் கான நிறுவனத்தின் உதவியுடன் மன்னார் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் மெசி டோ நிறுவன ஊழியர்களால் நேற்று வழங்கப்பட்டன.
மன்னார் பிரதான பாலம் மற்றும் பொலிஸ் நிலையம் உட்பட சிறிய சோதனைச் சாவடிகளில் கடமையாற்றும்; பாதுகாப்புத் தரப்பினருக்கு மேற்படி முகக்கவசங்கள் அவர் களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் மெசிடோ நிறுவனக் குழுத் தலைவர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் மன்னார் நகரசபை உறுப்பினர்களான ஜான்சன் மற்றும் ஜோசப் தர்மன் ஆகியோரால் வழங்கப்பட்டன.
இதேவேளை தாராபுரம் கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட இராணுவத்தின ருக்கும் முகக்கவசங்கள் வழ ங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.