யார் பொறுப்பு ?
Share
120 வருடங்களுக்கு முன் வாழ்ந்த யாரும் இன்று உயிருடன் இல்லை. இன்னும் 120 வருடங்களின் பின் இன்று இருப்பவர்கள் யாரும் உயிருடன் இருக்கப் போவதுமில்லை. இது சர்வ நிச்சயமானது.
இருந்தபோதும் மனிதன் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழும் காலத்தை கூட்டுவதற்காகவே நாம் போராட வேண்டி இருக்கிறது. இந்தப் போராட்டத்தின் வெற்றிக்காக நாம் அனைவரும் சிந்திப்பதற்கும் செய்வதற்கும் நிறையவே இருக்கின்றன.
இறப்புக்களை தாங்கிக்கொள்வது, சகித்துக் கொள்வது மிகவும் துயரமானதும் கஷ்டமானதுமான அனுபவம் என்பது எவருக்கும் புரியும். இந்த இறப்புக்களை மறைக்கவோ நியாயப்படுத்தவோ முயல்வது மனிதத்துவத்துக்கும் மனச்சாட்சிக்கும் விரோதமானது.
இளம் மனைவியையும் பிஞ்சுக் குழந்தைகளையும் தவிக்க விட்டு மாரடைப்பால் மரணித்துக் கொண் டிருப்பவர்கள் எத்தனை பேர்? ஈரல் நோய் காரணமாக இரத்த வாந்தியுடன் அனுமதிக்கப்பட்டு இறந்து போனவர்கள் எத்தனை பேர்? திடீரென ஏற்பட்ட பாரிசவாதத்தால் நம்மை விட்டு மறை ந்து போனவர்கள் எத்தனை பேர்?
தொழிலுக்கு போகும் பாதையிலே வாகனத்தால் மோதுண்டு மடிந்து போனவர்கள் எத்தனை பேர்? நஞ்சுண்ட நிலையில் அனுமதிக்கப்பட்டு இறந்து போனவர்கள் எத்தனைபேர்? சமூக விரோத கும்பல்களினால் சட்டத் துக்குப் புறம்பான விதத்திலே கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்? உடல் பருத்து நீரிழிவு, உயர் குருதி அமுக்கம் ஏற் பட்டு மரணிப்பவர்கள் எத்தனை பேர்?
கலாசார சீர்கேடுகள் காரணமாக சிக்கல்களுக்கு ஆட்பட்டு மனவேதனையுடன் மரணிப்பர் கள் எத்தனை பேர்? சுற்றாடல் மாசடைவதால் தொற்று நோய்கள் மற்றும் புற்றுநோய் என்பன ஏற்பட்டு இறந்து கொண்டிருப்பவர்கள் எத்தனைபேர்?
மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு உறவினர்களின் ஆதரவோ அரவணைப்போ இன்றி அன்புக்கு ஏங்கி மரணித்துப் போகும் முதியவர்கள் எத்தனை பேர்? முடிவின்றி தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த இறப்புக்களுக்கு எல் லாம் யார் பொறுப்பு?
மக்களுக்கு போதுமான மருத்துவ சுகாதார அறிவை புகட்டத் தவறிய மருத்துவத் துறையினரின் குற்றமா? ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களையும் பானங்களையும் அருமருந்து போல போலியாக விளம்பரம் செய்ய இடமளித்த ஊடகத் துறையினரின் குற்றமா?
உடற்பயிற்சி ஓர் உயிர்காப்பு பயிற்சி என்பதை சிறுவர்கள் மனதிலே பதிப்பிக்கத் தவறிய பெற்றோர்களின் குற்றமா? நோயுற்று மருத்துவமனைக்கு வரும் பொழுது அதி உச்சக் கவனிப்பு வசதிகளையும் கவனிப்பையும் உறுதிப் படுத்திய சுகாதாரத் துறையினரின் குற்றமா?
உயிர்கொல்லிகளான சிகரெட், சுருட்டு, பீடி போன்றவற்றை கடைகளிலே விற்பனை செய்வதற்கு அனுமதித்தவர்களின் குற்றமா? போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த முடியாது போன பொலிஸாரின் குற்றமா?
தீய பழக்கங்களையும் சமுதாய சீரழிப்பு நடவடிக்கைகளையும் எம்மி டையே பரப்ப அனுமதித்துக் கொண்டி ருக்கும் எமது சமுதாயக் கட்டமைப்பின் குற்றமா? ஒருவரை பசி யாத பொழுதும் உண்ணுமாறு வற்புறுத்துவதை ஓர் உபசரிப்பு முறையாகக் கருதும் எமது கலாசாரத்தின் குற்றமா?
எமது மக்களிடையே அன்பு, அமைதி, ஆதரவு, மன்னிக்கும் மனோபாவம், துயர் துடைப்பு, தியானம் போன்ற நல்ல விடயங்களை வேரூன்ற வைக்கத் தவறிய எமது மதங்களின் குற்றமா?
பொன் கொழிக்கும் விளை நில த்திலே உயிர் கொல்லிகளான புகை யிலையை பயிரிட்டும் நஞ்சு தெளிக் கப்பட்ட மரக்கறி, பழவகை களை சந்தையிலே விற்பனை செய்தும் வருகி ன்ற விவசாயிகளின் குற்றமா? சந்து பொந்துகள் எங்கும் சாராயக் கடைகள் திறக்க அனுமதித்தவர்களின் குற்றமா?
சுற்றாடல் பாதுகாப்பு சம்பந்த மான விழிப்புணர்வை ஏற்படுத் தத் தவறிய கற்றறிந்தவர்களின் குற்றமா? சமுதாய சீர்கேடுக ளுக்கு வழிகோலும் ரி.வி தொடர் நிகழ் ச்சிகளுக்கு அடிமையாகி இளம் சமுதாயத்தினரையும் அத ற்கு பலி கொடுத்துக் கொண்டி ருக்கும் குடும் பத்தவர்களின் குற்றமா? தெருவிலே வாகனம் செலுத்துவதற்கு தகுதி அற்றவர்க ளையும் தகுதி அற்ற வாகன ங்களையும் தொடர்ந்து அனும தித்துக் கொண் டிருக்கும் வீதி ஒழுங்குக்குப் பொறுப்பான வர்களின் குற் றமா?
தவிர்க்கப்படக்கூடிய மரண ங்களை தவிர்ப்பதற்கு நாம் ஒவ் வொருவரும் எம்மை மாற்றிக் கொள்வதற்கு நிறைய இடம் இரு க்கிறது என்பது புலப்படுகிறது.
நாம் மற்றவர்களை திருத்த முயல்வது போலவே எம்மையும் சற்று மாற்றிக் கொள்ள முயல் வோம். அதன்மூலம் பல அநி யாய மரணங்களை நாம் அனை வரும் ஒன்று சேர்ந்து தவிர்க்க முடியும்.
நாம் விடும் தவறுகளையே நாமே அடையாளப்படுத்தி எம்மை நாமே திருத்திக் கொள்ள முயலும் பயிற்சியானது உண்மையி லேயே மிகவும் கடினமானது.
ஆனால் இதுதான் மனிதனை மனிதத்துவம் மிக்கவனாக மாற் றும் ஒரு முக்கியமான இயல்பாக அமை யும். தான் விடும் தவறு களை தானே புரிந்துகொள்ளத் தெரியாத தன்மையே சுகாதார மேம்பாட்டுக்கும் மனிதகுல மேம் பாட்டுக்கும் பெரும் தடைக்கல் லாக இருக்கிறது.