Type to search

Headlines

சுற்றாடலை இறைவனாகப் போற்றும் மரபு ஆரோக்கிய மேம்பாட்டினது அடிக்கல்

Share

எமது இயற்கை சுற்றாடலை இறைவனாக உருவகித்து போற்றும் மரபு மிகப்பழைமையானது. இயற்கை வளங்களைப் பாதுகாப்பதும் தூய்மைப்படுத்துவதும் ஒரு இறை பணியாகவே கருதப்படுகிறது. இது ஆரோக்கிய மேம்பாட்டினது அடிக்கல். ஆயகலைகள் 64 இல் ஒன்றான மருத்துவக் கலை தோற்றம் பெற்றது.

எமது சுற்றாடல் செழிப்படை யும் பொழுது எமது மனம் புத் தூக்கம் பெறுவதுடன் சிந்தனை ஓட்டம் மகிழ்வானதாகவும் அமை தியானதாகவும் மாற்றம் பெறு கிறது.

மனிதனின் சிந்தனை ஓட் டத்தில் ஏற்படும் குழப்பமான நிலையே பல உடல் சம்பந்த மான அறிகுறிகளுக்கும் நோய் களுக்கும் அடிப்படைக் காரணங் களாக அமைகின்றன என்பதை பல ஆய்வுகள் உறுதி செய்கின் றன.

அனைத்து மதங்களுமே மனி தனின் சிந்தனை ஓட்டத்தை நெறிப்படுத்தி சுகப்படுத்தும் அற்பு தமான மருத்துவக் கலையை கற்பித்து நிற்கின்றன. இயற் கையுடன் ஒன்றிய எமது வாழ்க்கை முறை எமக்கு சுகத்தை அள்ளித்தருகிறது.
அதிகாலையில் எழுந்து குளித்து தோய்த்து உலர்ந்த ஆடை தரித்து கோயிலுக்குச் சென்று கோயிலை 3 தடவை வலம் வந்து ஆசனங்கள், அட்டாங்க, பஞ்சாங்க நமஸ்காரங்கள் செய்து இறை வணக்கம் செய்ய வேண்டும் என்று இந்து மதம் சொல்லுகிறது.


இங்கே உடைச்சுத்தம், உடல் சுத்தம், உடற்பயிற்சி, மன அமைதி என்ற நான்கு சுகாதார அறிவுரைகள் அடங்கி இருக்கின்றன. இயற்கைக்கு விரோதமான பஞ்சமாபாதங்களை தவிர்க்குமாறு மதங்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றன.


இந்த பஞ்சமா பாதங்களில் அடங்கியிருக்கும் கள், காமம் எனப்படுகின்ற மது அருந்துதல், தகாத பாலியல் தொடர்புகள் என்பவற்றைத் தவிர்த்து விடுவதன் மூலம் AIDSபோன்ற பல கொடிய தொற்று நோய்களிலிருந் தும் ஈரல், நரம்புகள் சம்பந்தமான நோய்களிலிருந்தும் எம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.

எமக்கு சுவாசக் காற்றை வழங் கிக் கொண்டிருக்கும் மரங்கள் எமக்கு சுகத்தை அருளிக் கொண் டிருக்கின்றன. இயற்கையை கட் டுப்படுத்தும் சக்தியாக இருந்து கொண்டிருப்பது சூரியன் என்பது எமக்குத் தெரியும். சூரிய நமஸ் காரம் எமது வழிபாட்டு முறைகளில் முக்கியமானது. இது காலையில் சூரிய ஒளியிலிருந்து சூரியனை நோக்கி நமஸ்காரம் செய் யும் ஒருமுறையாகும்.

இதனையே மேலைத் தேச நாடுகளிலே மருத்துவத் தேவை களுக்காக சன்பாத் என்று செய்து வருகின்றார்கள். இதன்மூலம் பல எலும்பு, பல் சம்பந்தமான நோய் களைத் தடுக்க முடியும்.

இயற்கை வளங்களைப் பாது காத்து இயற்கையுடன் ஒன்றிய அமைதியான வாழ்வுக்கு பழக்கப்படுவது எமது ஆரோக்கிய த்தை மேம்படுத்த உறுதுணை யாக அமையும்.

கடவுளைப் பக்தியுடன் மன முருகி, மனம் ஒருமித்து தியானித்து வழிபடும் முறை அன்று தொட்டு எல்லா மதங்களிலுமே பின்பற்றப்பட்டு வருகின்றது. இதன்மூலம் பல தீமைகள் நீங்கும், நாம் காப்பாற்றப்படுவோம், சுகம் பெறுவோம், பல நல்ல விடயங்கள் நடைபெறும், மனம் சாந்தி பெறும் என்ற நம்பிக்கை மத நம்பிக்கை உடைய அனைவரது மனங்களிலும் குடிகொண் டிருக்கிறது.

இவை உண்மைதானா என்ற கேள்வியும் பலரது மனங்களிலே எழத்தான் செய்கிறது. ஆனால் இவை உண்மை என ஆராய்ச் சிகள் நிரூபித்து வருகின்றன.

மனம் ஒருமித்து மனமுருகி தியானித்து வணங்குவது என் பது Meditation, Relaxation சுவாசப் பயிற்சி என்ற மருத்துவ விஞ்ஞானப் பதங்களுக்குள் அட ங்குகிறது. இவற்றில் ஏற்படும் அனுகூலங்கள் பல இவற்றை ஒழுங்காகச் செய்து வந்தால் மனப்பாரம் குறைவதுடன் பல கொடிய நோய்களிலிருந்தும் காப் பற்றப்படுவதுடன் உடலில் நல்ல பல மாற்றங்கள் நடப்பதற்கும் இது வழிகோலும் என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக் கிறது.

எமது இயற்கை சுற்றாடலை இறைவனாக உருவகித்து போற் றும் வழிபாட்டு முறைகள் மனி தனை உடற் பலமும் ஆன்மிக பலமும் பொருத்தியவனாக ஒரு ஆரோக்கியமுள்ள மனிதனாக வாழ்வதற்கு வழிசமைத்து நிற் கின்றது.

Dr. சி. சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link