நாளுக்கு நாள் தீவிரமாகப் பரவும் கொரோனா ஒரு இலட்சத்து 21 ஆயிரத்தை கடந்த மொத்த தொற்றாளர்கள்
Share

இலங்கையில் கொரோனாத் தொற்று பாதிப்பு ஓயாத அலையாக அதிகரித்து வரும் நிலையில் நேற்றும் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று மேலும் ஆயிரத்து 914 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இலங்கையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 338 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.