யாழ்.மாநகர காவல்படை சீருடை அணிந்த ஐவரும் 4ஆம் மாடிக்கு அழைப்பு
Share
யாழ்ப்பாணம் மாநகரைச் சுத்தமாக வைத்திருப்பதற்கும் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையைக் கையாள்வதற்கும் என அமைக்கப்பட்ட யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் ஐவரும் விசாரணைக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், கொழும்பிலுள்ள நாலாம் மாடியில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் அலுவலகத்துக்கு எதிர்வரும் 11ஆம் திகதி காலை ஒன்பது மணிக்குச் சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகரத்தை தூய்மையான நகரமாகப் பேணும் பொருட்டு, மாநகர சபை ஊழியர்கள் ஐவர் மாநகர காவலர்களாக தனியான சீருடை அணிந்து கடந்த மாதம் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
எனினும், உத்தியோகத்தர்கள் அணிந் திருந்த சீருடை தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடைக்கு ஒத்தது என சர்ச்சைகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.