Type to search

Headlines

8 தமிழர்களை படுகொலை செய்த இராணுவ சிப்பாய் விடுதலை

Share

யாழ்.மிருசுவில் பகுதியில் 8 தமிழர்களை சுட்டும் வெட்டியும் படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச்சிப்பாய் பொது மன்னிப் பின் அடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்­வால் விடுதலை செய்யப் பட்டுள்ளார்.

கொரோனா அச்சத்தால் நாடுமுழுவதும் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் சத்தமில்லாமல் மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப் பட்ட இராணுவ சிப்பாயான சுனில் ரத்னாயக்க சிறைச்சாலை நடை முறைகள் முடிவடைந்து நேற்று மதியம் தனது வீட்டுக்குச் சென்றார்.

பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண சிறைச்சாலைக்கு நேரில் சென்று, அவரை வழியனுப்பி வைத்தார்.

2000 டிசம்பர் 19 அன்று மிரு சுவிலில் தமது வீடுகளை பார்வையிட சென்ற பொதுமக்கள் இராணு வத்தினரால் கைது செய்யப்பட்டு, சுட்டுக் கொல்லப் பட்டிருந்தனர்.

இதில் தப்பியோடி வந்த ஒருவர், வழங்கிய தகவலின் அடிப்படையில் நடத்தப் பட்ட விசாரணையில் 14 இராணுவச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்ட னர்.

சாவகச்சேரி நீதிமன்றதால் அவர்கள் விளக்கமறியலில் வைக் கப்பட்ட பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு விசா ரணை நடந்து வந்தது.

வழக்கு பின்னர் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, பின்னர் கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, மூவரடங்கிய நீதிபதிகள் குழாமி னால் விசாரிக்கப்பட்டது.

5 இராணுவச்சிப்பாய்கள் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப் பட்டிருந்தது. 2015 யூன் 25 அன்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், சார்ஜண்ட் சுனில் ரத்னாயக்க விற்கு மரண தண்டனை விதிக் கப்பட்டது.

ஏனைய நான்கு சிப்பாய்களை யும் போதிய ஆதாரமில்லை யென்பதால் விடுதலை செய்தது.

இந்த நிலையில் மிருசுவில் படுகொலை வழக்கில் மரணதண் டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்னாயக்கவே விடுதலையாகி யுள்ளார்.

சிறையிலடைக்கப்பட்டுள்ள இராணுவத்தினருக்கு பொது மன் னிப்பு வழங்குவதாக கடந்த ஜனாதி பதி தேர்தல் காலப்பகுதியில் கோட்டா வாக்குறுதியளித்திருந்தார்.

மேலும் யாழில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக் காலத்தில் தமிழ் அரசியல் கைதி களை விடுதலை செய்வேன் எனவும் கோட்டா அறிவித்திருந் தமை குறிப் பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link