கிளிநொச்சியில் இராணுவச் சிப்பாய் திடீரென மயங்கி வீழ்ந்து மரணம்
Share

கிளிநொச்சி ஜெயபுரம் இராணுவ முகாமில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒரு வர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரத்தை சேர்ந்த 26 வயதுடைய இராணுவ சிப்பாயே மேற்படி உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்று முன்தினம் இரவு கடமையில் இருந்துள்ளார். திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக இவரின் இரத்த மாதிரிகள் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளன.