பஸ், ரயில் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்
Share
கொழும்பு, கம்பஹா உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் இடையேயும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் இன்று திங்கட்கிழமை இடம்பெறும் என்று பயணிகள் போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இவ்வாறு போக்குவரத்துச் சேவைகள் இடம் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்துச் சேவைகள் கடந்த மே 26ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட போதும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்குள் அனுமதிக்கப்பட வில்லை.
தற்போதுள்ள சுகாதாரக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெறும். முகக்கவசம் அணியாதவர்கள் பேருந்து மற்றும் தொடருந்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டார்.


