Type to search

Headlines Local News News

42 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்கவில் கைது!

Share

சுமார் 42 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்த முயன்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான இப்பெண் இன்று (29) அதிகாலை சீனாவின் குன்மிங் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். விமான நிலையத்தின் “பசுமை வழி” ஊடாக இந்த சிகரெட் தொகையை கடத்திச் செல்ல முயன்ற போதே அவர் சுங்க அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணின் பயணப் பொதிகளை சோதனையிட்ட போது, அவற்றுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட 28,000 சிகரெட்டுகள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 40 வயதுடைய சீன நாட்டு பெண் தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link