Type to search

Headlines Local News News

4 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Share

சுமார் 4 கோடியே 38 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வந்த இந்தியப் பயணி ஒருவர் இன்று (13) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 29 வயதுடைய இந்திய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் இன்று அதிகாலை 12:30 மணியளவில் தாய்லாந்தின் பேங்காக் நகரிலிருந்து தாய் ஏயார்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான TG-307 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த 2 பயணப் பொதிகளுக்குள் 4 பாக்கெட்டுகளாக பொதி செய்யப்பட்டிருந்த 4 கிலோ 389 கிராம் “குஷ்” போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபரான இந்திய பிரஜையும் போதைப்பொருள் தொகையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link