Type to search

Headlines Local News News

25 இலட்சம் ரூபா பெறுமதியான உலர்ந்த மஞ்சள் கடத்தல் – இருவர் கைது

Share

சிலாவத்துறை, சவரியபுரம் கடற்கரை அருகே சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட சுமார் 2,500,000 ரூபா பெறுமதியான உலர்ந்த மஞ்சளுடன் இருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக, மன்னார் விசேட அதிரடிப்படை முகாமின் வடக்கு மாகாண விசேட சுற்றிவளைப்பு பிரிவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கடல் வழியாகக் கடத்தி வரப்பட்ட 1,179 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் சவரியபுரம் மற்றும் மறிச்சுக்கட்டி பகுதிகளைச் சேர்ந்த 47 மற்றும் 50 வயதுடைய நபர்களாவர்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்களும் மஞ்சள் தொகையும் தெள்ளிப்பளை சுங்கத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link