Type to search

Headlines Local News News

15,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தைக் கொள்முதல் செய்ய அனுமதி

Share

2026 சிறுபோகத்திற்குத் தேவையான 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தைக் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் விவசாய சேவைக்குழுக்கள் மூலம் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2026 சிறுபோகத்தில் 550,000 ஹெக்டேயர் நெல் நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் என ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டிருந்த போதிலும், தற்போதைய சூழ்நிலையின்படி அது 450,000 முதல் 500,000 ஹெக்டேயர் வரையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்காக சுமார் 75,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளதுடன், நாட்டில் உள்ள உர இருப்புகளில் இருந்து இதுவரையில் 48,297.87 மெட்ரிக் தொன் உரம் விவசாய சேவைக்குழுக்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2026 ஏப்ரல் 06ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 50 கிலோகிராம் எடையுள்ள யூரியா உறை ஒன்றினை 10,200 ரூபாய் என்ற நிலையான விலைக்கு விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, சிறுபோகத்திற்கு மேலும் தேவைப்படும் 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தைக் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link