108 இடங்களில் தவெக முன்னிலை.. விஜய் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு!
Share
செங்கோட்டையன் தொடர் முன்னிலை.!
கோபிச்செட்டிபாளையத்தில் தவெக மாநிலக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் போட்டியிட்டிருந்த நிலையில், அவர் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.
பாஜக முக்கிய முகங்கள் தொடர்ந்து பின்னடைவு
சாத்தூரில் நயினார் நாகேந்திரன், மயிலாப்பூரில் தமிழிசை சௌந்தரராஜன், அவிநாசியில் எல். முருகன், கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் ஆகியோர் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர். அதேசமயம், 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 3 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
4 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலை!
நீண்ட இழுபறிக்குப் பிறகு, திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிட்டிருந்த நிலையில், தற்போது, கடலூர், குளச்சல், விளவங்கோடு, மயிலாடுதுறை ஆகிய 4 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலை பெற்றிருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தமிழக வெற்றிக் கழகம் 98 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 78 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 49 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
எழும்பூர் தொகுதி நிலவரம்!
தவெக வேட்பாளர் ராஜ்மோகன் 10,760 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இதையடுத்து, திமுகவின் தமிழன் பிரசன்னா 6,314 வாக்குகள் பெற்று இடண்டாவது இடத்திலும், அதிமுகவின் அபிஷேக் ரங்கசாமி 6,260 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளனர். நாதக வேட்பாளர் சரண்யா 17 வாக்குகளை பெற்றிருக்கிறார்.
தொடர் முன்னிலையில் செந்தில் பாலாஜி
கோவை தெற்கில் செந்தில் பாலாஜி 18,775 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தவெக ஆதிக்கம்!
செங்கல்பட்டில் உள்ள 7 தொகுதிகளில் 6-ல் தவெக முன்னிலை பெற்றுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் முன்னிலை
சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், தற்போது 4 சுற்று நிறைவியில் முன்னிலை பெற்றிருக்கிறார்.
மதுரை மாவட்ட முன்னிலை நிலவரம்
மதுரை மொத்த தொகுதிகளின் எணிக்கை 10 இதில் தி.மு.க கூட்டணி 4 உம் அ.தி.மு.க கூட்டணி 0 உம் த.வெ.க 5 உம் நா.த.க 0 தொகுதிகளையும் பெற்றுள்ளது.
முதல்வர் வேட்பாளர்களின் தற்போதைய நிலவரம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின்- 10,639 வாக்குகள் பெற்று பின்னடைவு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி- 11,240 வாக்குகள் பெற்று முன்னிலை
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 3,711 வாக்குகள் பெற்று பின்னடைவு
தவெக தலைவர் விஜய் 13,055 வாக்குகள் பெற்று பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் 3870 வாக்குகள் பெற்று முன்னிலை


