வவுனியாவில் புகையிரத விபத்து: முதியவர் பலி!
Share
வவுனியா, தோணிக்கல் ஆலமரம் பகுதிக்கு அருகிலுள்ள ரயில்வே கடவையில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை தோணிக்கல் ரயில்வே கடவையை முதியவர் ஒருவர் கடக்க முயன்றபோது, ரயிலுடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் சிக்கிய குறித்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் குறித்த விபரங்கள் இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


