Type to search

Local News News

வவுனியாவில் ஐந்து குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு!

Share

வவுனியாவில் குறைந்த வருமானத்தினை பெறும் ஐந்து குடும்பங்களுக்கு அரசினால் அமைக்கப்பட்ட வீடுகள் இன்று கையளிக்கப்பட்டது.

தமக்கென சொந்தமான இடம், அழகான வாழ்க்கை என்ற கருப்பொருளுடன் குறைந்த வருமானம் பெறுபவர்களின் சொந்த வீட்டுக்கனவை நனவாக்கும் நோக்குடன் அரசங்காத்தினால் இந்ததிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

அந்தவகையில் வவுனியாவில் கற்குழி, கூமாங்குளம், அவுசதபிட்டிய, அலகல்ல,நெடுங்குளம் ஆகிய பகுதிகளில் இவ்வீடுகள் அமைக்கப்பட்டு இன்று உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க,மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link