Type to search

Headlines Local News News

ரஷ்ய சுகாதார அமைச்சர் இன்று இலங்கை வருகை

Share

ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ உள்ளிட்ட தூதுக்குழுவினர், மூன்று நாள் உத்தியோகபூர்வ இன்று (03) இலங்கை வருகை தந்துள்ளனர்.

இந்த விஜயத்தின் போது, இலங்கையின் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சுகாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ரஷ்ய அமைச்சர் விசேட கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

அத்துடன், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தையும் இக்குழுவினர் சந்திக்கவுள்ளனர்.

மே 04-ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றிற்கு இத்தூதுக்குழுவினர் விஜயம் செய்யவுள்ளனர்.

இலங்கை மற்றும் ரஷ்யாவின் சுகாதார அமைச்சுகளுக்கு இடையே புரிந்துணர்வு உடன்படிக்கைகளை  எட்டுவதற்கு இங்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், மருத்துவ நிபுணர்களுக்கான பயிற்சிகள், கல்விசார் ஒத்துழைப்புகள் (மாணவர் பரிமாற்றம், கூட்டுப் பாடநெறிகள்), ஆயுர்வேத மருத்துவத் துறை மற்றும் சுற்றுலா சுகாதார சேவை உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளது.

ரஷ்ய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் தமது மூன்று நாள் விஜயத்தை நிறைவு செய்து கொண்டு, வரும் 5-ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படவுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link