Type to search

Headlines Local News News

யானை தாக்க்கி சிறுமி பலி!

Share

பொலன்னறுவை, அரலகங்வில  பகுதியில் இன்று (04) அதிகாலை வீடு ஒன்றின் மீது காட்டு யானை நடத்திய தாக்குதலில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அதனுள் சிக்கி 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த  சம்பவத்தில் அரலகங்வில, ரத்மெல்தென்ன, இலக்கம் 180 என்ற முகவரியில் வசித்து வந்த ஆர்.டி. செனிலி தினேத்மா என்ற முன்பள்ளி மாணவியே உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை காட்டு யானை வீட்டைத் தாக்கும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது சிறுமியுடன் தூங்கிக்கொண்டிருந்த தாய் எழுந்த சென்ற சமயம் யானை வீட்டின் சுவரைத் தாக்கியுள்ளது.

இதில் சுவர் இடிந்து சிறுமியின் தலையில் விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவங்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link