Type to search

Headlines News World News

மெட்டா நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் பணிநீக்கம்!

Share

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திட்டங்களுக்கு அதிகளவு முதலீடு செய்யவுள்ளதால் அடுத்த மாதம் தனது ஊழியர்களில் சுமார் 8,000 பேரை  பணிநீக்கம் செய்யப்போவதாக  மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனை தவிர வெற்றிடமாக உள்ள ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும்  நிரப்பப்போவதில்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மாத்திரம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்காக 135 பில்லியன் டொலர்களை  மெட்டா செலவிடத் திட்டமிட்டுள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் செலவிடப்பட்ட மொத்தத் தொகைக்குச் சமமானதாகும்.

செயற்கை கருவிகளைப்  பயன்படுத்தும் ஊழியர்கள் அதிக உற்பத்தித்திறனுடன் செயல்படுகின்றனர். ஒரு பெரிய குழு செய்ய வேண்டிய வேலையை தற்போது ஒருவரே செய்து முடிக்கிறார்” என மெட்டா தலைமை நிர்வாகி மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

2026-ஆம் ஆண்டானது வேலை செய்யும் முறையை செயற்கை நுண்ணறிவு முற்றிலும் மாற்றியமைக்கும் ஆண்டாக இருக்கும் என அவர் முன்னரே கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link