Type to search

Headlines Local News News

முதலாம் தரத்துக்கான கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு!

Share

கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், 2026 ஆம் ஆண்டு முதலாம் தரத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளுக்குரிய செயற்பாட்டுப் புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதலாம் தரத்திற்கான பாடத்திட்டங்கள் தொடர்பான தெளிவுபடுத்தல்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் ஏற்கனவே வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.

மாகாண ஆரம்பக்கல்விப் பாடப் பணிப்பாளர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இவ்வாறு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முதலாம் தரத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளுக்குரிய செயற்பாட்டுப் புத்தகங்களை விநியோகிக்கும் பணிகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் தவணைக்குரிய பாடப்பரப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாத பாடசாலைகள் காணப்படுமாயின், இரண்டாம் தவணையில் அந்தப் பாடப்பகுதிகளைப் பூர்த்தி செய்வதற்கு அதிபர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link