பல மாவட்டங்களுக்கு 100 மி.மீ அதிக மழை வீழ்ச்சி!
Share
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, மே மாதம் 11 ஆம் திகதியளவில் அது ஒரு குறைந்த தாழமுக்கமாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதுடன், வானம் மேகமூட்டமாகக் காணப்படும்.
மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா, வடமேற்கு மற்றும் வட மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


