பசிபிக்கில் தரையிறங்கும் ஆர்டெமிஸ் – விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை!
Share
சந்திரனைச் சுற்றிப் பயணம் செய்து வரலாற்று சாதனை படைத்த ‘ஆர்டெமிஸ் II’ (Artemis II) விண்கலத்தின் விண்வெளி வீரர்கள் குழுவினர் மீண்டும் பூமிக்கு திரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, அவர்கள் நாளை இரவு சான் டியாகோ (San Diego) கடற்கரைக்கு அப்பால் உள்ள பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 10 நாட்களாக நிலவை நோக்கிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரப் பயணம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், விண்வெளி வீரர்கள் தரையிறங்கும் பகுதியில் விசேட பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் காவல்துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் அரை நூற்றாண்டு காலத்திற்குப் பின்னர் மனிதர்கள் நிலவைச் சுற்றி வந்த இந்தச் சாதனைப் பயணம், எதிர்கால விண்வெளி ஆய்வுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.


