Type to search

Headlines Local News News

நாளை முதல் QR பரிமாற்றங்களுக்கு மேலதிக கட்டணம் இல்லை: அதிரடி அறிவிப்பு!

Share

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் நோக்கில், 5,000 ரூபாவிற்கும் குறைவான கியூ.ஆர். (QR) பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (06) முதல் எவ்விதக் கட்டணமும் அறவிடப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதியினால் நாளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், பணம் அனுப்புபவர் அல்லது பெறுபவர் என இருவரிடமிருந்தும் மேலதிக சேவைக்கட்டணங்கள் எதுவும் அறவிடப்படமாட்டாது. இதற்கான செலவினங்களை அரச மற்றும் தனியார் வங்கிகள் பொறுப்பேற்க இணங்கியுள்ளன.

தற்போது இலங்கையில் கியூ.ஆர். பயன்பாடு குறைவாக உள்ள நிலையில், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களை ஊக்குவிக்கவும், பணப் பயன்பாட்டைக் குறைக்கவும் இந்த ‘பூச்சியக் கட்டண’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link