நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழப்பு: 7,000க்கும் அதிகமானோர் பாதிப்பு
Share
நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துளது.
கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவர், நேற்று (22) வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதன் காரணமாகவே இந்த மரணம் சம்பவித்துள்ளது.
அத்துடன், தற்போது நிலவும் இந்த அனர்த்த நிலைமை காரணமாக 1,966 குடும்பங்களைச் சேர்ந்த 7,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 201 பேர் தற்போது 06 பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த சீரற்ற வானிலை காரணமாக 4 மாவட்டங்களைச் சேர்ந்த 20 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் மக்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோல், 123 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், முழுமையாக சேதமடைந்துள்ள வீடுகளின் எண்ணிக்கை 2 ஆகும்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவில் பதிவாகியுள்ளதுடன், அதன் அளவு 137.80 மில்லிமீற்றர் ஆகும்.


