Type to search

Headlines Local News News

தேசிய அடையாள அட்டை தொடர்பில் ஆட்பதிவு திணைக்களத்தின் புதிய அறிவிப்பு

Share

இன்று முதல், மறு அறிவித்தல் வரை அவசர தேவை உள்ளவர்களுக்கு மாத்திரமே தேசிய அடையாள அட்டையை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்களே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுள்ளது.

அதன்படி, கணினி கட்டமைப்பை சீரமைத்து இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாக ஆட்கள் பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேசிய அடையாள அட்டை விடயங்களைச் சரிபார்த்தல் மற்றும் அரசாங்க, அரச சாரா நிறுவனங்களுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளிட்ட ஏனைய அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் வழக்கமான பொதுச் சேவைகள் மற்றும் ஏனைய அலுவலகப் பணிகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link