Type to search

Headlines Local News News

தெல்லிப்பழை வைத்தியசாலை நிர்வாகத்தை மேம்படுத்த விசேட குழு நியமனம்

Share

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நிர்வாக செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு நேற்றுமுன்தினம் (27) விஜயம் மேற்கொண்ட அமைச்சர், அங்குள்ள நிர்வாகத்தினர் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர்களுடன் கலந்துரையாடினார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

மேலும், வைத்தியசாலையில் உள்ள மூன்று மாடிக்கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை முழுமையாக நிறைவு செய்து தருவதாகவும் அவர் இதன்போது வாக்குறுதியளித்தார்.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஶ்ரீபவானந்தராஜா, சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link