Type to search

Headlines Local News News

குவைத் விமான நிலைய தாக்குதலுக்கு இலங்கை அரசு கவலை தெரிவிப்பு

Share

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், இந்தத் தாக்குதல் சம்பவத்தின் காரணமாக மூன்று இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வரையறையிலான பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றுக்கு இலங்கை அரசாங்கம் முதலிடம் வழங்குவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், அனைத்துத் தரப்பினரும் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுக்கும் இலங்கை, பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு வலுவாக ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link