Type to search

Headlines Local News News

கிளிநொச்சியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு

Share

ஏ9 வீதியில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள வடமாகாண விளையாட்டு வளாகத்திற்கு அருகில், யாழ்ப்பாணம் திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை கடக்க முயன்ற பாதசாரி ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் பாதசாரி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் பயணித்தவர் ஆகிய மூவரும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

அங்கு சிகிச்சை பெற்று வந்த 62 வயதுடைய பாதசாரி உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link