Type to search

Headlines Local News News

உயர் தர விடைத்தாள் மதிப்பீட்டு பரீட்சகர்களின் விண்ணப்பக் காலம் நீடிப்பு!

Share

க.பொ.த (உயர் தர) பரீட்சை – 2026 விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக இதுவரை விண்ணப்பிக்க முடியாமல் போன பரீட்சகர்களிடமிருந்து கிடைத்துள்ள கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக இணையவழியில் (Online) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை 2026.06.26 ஆம் திகதி வரை நீடிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தள முகவரியின் ஊடாக 2026.06.26 ஆம் திகதி வரை இணையவழியில் விண்ணப்பிக்க முடியும். 

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமாயின், தொழில்நுட்ப உதவிகளுக்காக 0113661122, 0113671568 ஆகிய தொலைபேசி எண்களின் ஊடாக இணையவழிப் பிரிவையோ அல்லது 0112785231, 0112785681 ஆகிய தொலைபேசி எண்களின் ஊடாக பாடசாலை பரீட்சைகள் மதிப்பீட்டுப் பிரிவையோ தொடர்புகொள்ளுமாறு மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link