Type to search

Headlines Local News News

இலங்கை சிறைகளில் இருந்த 30 மீனவர்கள் விடுதலை

Share

இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்ட 30 இந்திய மீனவர்கள் நேற்று (02) சென்னையை சென்றடைந்துள்ளனர். 

ராமேஸ்வரம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இந்த மீனவர்கள், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அண்மையில் இந்திய பிரதமரை சந்தித்த தமிழக முதலமைச்சர் விஜய், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை ராஜதந்திர நடவடிக்கையின் கீழ் விடுவிப்பதற்கான கோரிக்கையினை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link