இந்தியாவில் மின்சார வாகன விற்பனை அதிரடி அதிகரிப்பு!
Share
எரிபொருள் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவில் மின்சார மோட்டார்த் வாகனங்களின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க – ஈரானிய யுத்த மோதல்களுக்கு மத்தியில் உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையானது அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது.
தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு 10 வாகனங்களிலும் ஒன்று மின்சார வாகனம் (EV) எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அங்கு மின்சார முச்சக்கரவண்டிகளின் பயன்பாடு 30 சதவீதத்தினாலும் (30%), மோட்டார் சைக்கிள்களின் பயன்பாடு 15 சதவீதத்தினாலும் (15%) அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
இந்தியா தனக்குத் தேவையான எண்ணெயில் 90 சதவீதத்தை (90%) இறக்குமதி செய்கிறது.
கச்சா எண்ணெய் விலை 50 சதவீதத்தால் (50%) அதிகரித்துள்ள நிலையில், எரிபொருளைச் சேமிப்பதற்காக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல், வீட்டிலிருந்தே பணியாற்றுதல் மற்றும் வாகனங்களைப் பகிர்ந்து பயணித்தல் உள்ளிட்ட வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அந்நாட்டுப் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.


